Sunday, February 24, 2013

இன்று ஒரு தகவல்

தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது..?
துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது.. நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும், ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும், இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்...



இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்முக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது, இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்...

இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்.. பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்...

இந்த தகவலை உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்... தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர், உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்...!

பாசத்திர்க்கான பரிசு


ஒரு மூதாட்டி காய்கறிகள் விற்றுக்கொண்டிருந்தார். அந்த மூதாட்டியை ஒரு சிறுவன் உற்று பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அவர் அருகில் சென்ற சிறுவன் பாட்டி இந்தாங்க இந்த காச வச்சுக்கோங்க என்று ஒரு பத்து ரூபாய் நோட்டை நீட்டினான். அதற்க்கு அந்த பாட்டி காசெல்லாம் வேனா ராசா ஏதாது வாங்கிக்கோனு என்று பதில் சொல்ல அந்த சிறுவன் ஏதோ யோசித்துக் கொண்டே இருந்தான். சற்று நேரம் கழிந்த பின் பாடி எனக்கு ஒரு முத்தம் தா என்று கேட்க்க சற்றும் யோசிக்காமல் அந்த பாட்டி அந்த மழலையின் கன்னத்தில் ஒரு முத்தம் இட்டார். அந்த சிறுவன் மறுபடியும் அவரிடம் பத்து ரூபாய் நோட்டை நீட்டினான். வேணாம் ராசா ஏதாது வங்கிக்கோனு சொல்ல அந்த சிறுவன் அதான் உனிடம் இருந்து முத்தத்தை வாங்கிவிட்டேனே என்றான். இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத அந்த பாட்டி அந்த சிறுவனை கட்டி அனைத்து சிறு துளி கண்ணீர் சிந்தினார்.

அந்த சிறுவன் தந்தது முத்தத்திற்கு தந்தபரிசு அல்ல அது அந்த பாட்டி தந்த பாசத்திர்க்கான பரிசு.

யானையின் தமிழ்ப்பெயர்கள்


வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை. யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க வைக்கும் தமிழர்களின் அறிவுத் திறன். இத்தனைப் பெயர்களுக்கு இடம் கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன் ! 




யானையின் தமிழ்ப்பெயர்கள்

  • யானை/ஏனை (கரியது)
  • வேழம் (வெள்ளை யானை)
  • களிறு
  • களபம்
  • மாதங்கம்
  • கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
  • உம்பர்
  • உம்பல் (உயர்ந்தது)
  • அஞ்சனாவதி
  • அரசுவா
  • அல்லியன்
  • அறுபடை
  • ஆம்பல்
  • ஆனை
  • இபம்
  • இரதி
  • குஞ்சரம்
  • இருள்
  • தும்பு
  • வல்விலங்கு
  • தூங்கல்
  • தோல்
  • கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
  • எறும்பி
  • பெருமா (பெரிய விலங்கு)
  • வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது)
  • புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது)
  • ஒருத்தல்
  • ஓங்கல் (மலைபோன்றது)
  • நாக
  • பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
  • கும்பி
  • தும்பி (துளையுள்ள கையை உடையது)
  • நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
  • குஞ்சரம் (திரண்டது)
  • கரேணு
  • உவா (திரண்டது)
  • கரி (கரியது)
  • கள்வன் (கரியது)
  • கயம்
  • சிந்துரம்
  • வயமா
  • புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
  • தந்தி
  • மதாவளம்
  • தந்தாவளம்
  • கைம்மலை (கையை உடைய மலை போன்றது)
  • வழுவை (உருண்டு திரண்டது)
  • மந்தமா
  • மருண்மா
  • மதகயம்
  • போதகம்
  • யூதநாதன் (யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்)
  • மதோற்கடம்(மதகயத்தின் பெயர்)
  • கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்)
  • பெண் யானையின் பெயர்கள்
  • பிடி
  • அதவை
  • வடவை
  • கரிணி
  • அத்தினி
  • யானைக்கன்றின் பெயர்கள்(இளமைப் பெயர்கள்)
  • கயந்தலை
  • போதகம்
  • துடியடி
  • களபம்
  • கயமுனி
     

Friday, February 22, 2013

Must Know this

அபாயகரமானது


வாட்டர் ஹீட்டர் பொருத்த வந்தவர் பாத்ரூமில் கேமராவை பிக்ஸ் செய்து 8 மாதம் படம் பார்த்த எலக்ட்ரீசியன் கைது.இது அனைவருக்கும் குறிப்பாக பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை, திருவனந்தபுரம் அருகில் உள்ள முட்டாடா என்னும் இடத்தில் இரண்டு திருமணமான பெண்கள், அவர்களின் பிள்ளைகள் உள்ள வீட்டில்வாட்டர் ஹீட்டர் பொருத்த பக்கத்து வீட்டி எலக்ட்ரீசியனை அழைத்துள்ளார்கள். சற்றுமுன் செய்திகள்

வாட்டர் ஹீட்டர் பொருத்த வந்தவர் ஹீட்டரில் உள்ள ஆல்டோ மீட்டரில் சிறிய கேமராவை பொறுத்தி அந்த கேமரா சிறிய ஏவி டிரான்ஸ்மிட்டர் வழியாக படங்களை அனுப்பியுள்ளது, இதை பக்கத்து வீட்டு எலக்ட்ரீசியன் கம்ப்யூட்டரோடு இணைத்து படங்களை பார்த்துக்கொண்டிருந்துள்ளான், இது கடந்த எட்டுமாதங்களாக நடந்து வந்துள்ளது, தற்போது அதை அந்த வீட்டில் உள்ளவர்கள் கண்டுபிடித்து காவல்துறையில் புகார் அளிக்க எலக்ட்ரீசியனை கைது செய்துள்ளனர், சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த செய்தி வந்துள்ளது. மேலும் பல வீடுகளில் இவன் ஹீட்டர் பொருத்தி உள்ளதால் அங்கேயும் இதே வேலையை செய்துள்ளானா என விசாரித்து வருகின்றனர்.

#அட வீணாப்போனவனே, நம்பித்தானட உன்னை விட்டாங்க

வாசகர்களே உஷாரா இருங்க, சிறிய சிறிய கேமராக்கள் என அதி நவீனமாகியுள்ள உலகில் எந்த வேலையை செய்ய அனுமதித்தாலும் முழுவதுமாக சோதனை செய்யுங்கள். பலரையும் உஷார் படுத்த இதை ஷேர் செய்யுங்கள்.

Monday, February 18, 2013

ஓட்டுனர்களுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...!

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது:



* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத
வேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.

* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

* கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது
சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி வராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்' செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு'
இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.


Thank info
Puthiya Thalaimurai