Thursday, November 29, 2012

LPG Expiry

Something informative.
This information is useful.......

Have U ever heard about LPG cylinder's expiry date....!!

Do you know that there is an expiry date (physical life) for LPG cylinders? Expired Cylinders are not safe for use and may cause accidents. In this regard, please be cautious at the time of accepting any LPG cylinder from the vendor.

Here is how we can check the expiry of LPG cylinders:
On one of three side stems of the cylinder, the expiry date is coded alpha numerically as follows A or B or C or D and some two digit number following this e.g. D06.

The alphabets stand for quarters -

1. A for March (First Qtr),
2. B for June (Second Qtr),
3. C for Sept (Third Qtr),
4. D for December (Fourth Qtr).

The digits stand for the year till it is valid. Hence D06 would mean December qtr of 2006.

Please Return Back the Cylinder that you get with a Expiry Date, they are prone to Leak and other Hazardous accidents...

The second example with D13 allows the cylinder
to be in use Up to Dec 2013.
Kindly Share this Info with everyone .

தினம் ஒரு தகவல்

தெரியாததை தெரிந்து கொள்வோம் 
தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்

தமிழில் சில செய்திகள் உங்களுக்காக :

வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!

தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.
இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டுவிடும் கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —

உபயோகமான தகவல் என்று நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்.... 

சித்தர்கள் மிகப் பெரிய விஞ்ஞானிகள்

சித்தர்கள் மிகப் பெரிய விஞ்ஞானிகள். யோகத்தால் ஞானமடைந்து, ஞானத்தால் உண்மையை உணர்ந்தவர்கள். உணவே இல்லாமல் உயிர் வாழ முடியும் என்று வாழ்ந்து காட்டியவர்கள். பல நாட்கள் உணவே இல்லாமல் தவம் செய்து பேரானந்தத்தை அனுபவித்தனர். அது எப்படி? நவீன உடலியல் உமிழ் நீரானது வாய், கன்னம் ,தாடை, போன்ற வாய் பகுதியில் சுரப்பதாகச் சொல்கிறது. அது எங்கே சுரந்தாலும் அதற்கு அடித்தளமாக இருந்து அதைஅதிகமாகச் சுரக்கச் செய்வதும
், கட்டுப் படுத்துவதுமான வேலைகளைச் செய்வது எது என்றால் பிட்யூட்டரி சுரப்பியே ஆகும். இதை சித்தர்கள் கண்டுபிடித்தனர்.



இந்த உமிழ்நீரைத்தான் அவர்கள் காயப்பால் என்று சொல்வார்கள். என்னடா இது எச்சிலைப் போய் பெரிதாகப் பேசுகிறானே என்று நினைக்காதீர்கள். எச்சில் வேறு உமிழ்நீர் வேறு. எச்சிலானது நாறும். உமிழ்நீர் நாற்றமடிக்காது. இது எப்பொழுதாவது நமக்கு வாயில் ஊறும்.
டாக்டர் ஊசி போடுவதற்கு முன் பீய்ச்சி அடிப்பாரே, அது போல சுரந்து அடிக்கும். 


வெட்டவெளியாகிய சிரசில் ஊறுவது, தன்னை உண்பவரின் பசியை போக்குவது. ஆட்டுப்பால், மாட்டுப்பால் போல காயப்பால் நாற்ற மடிக்காது, என்று சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
தேவலோகத்திலும் இதைப்போல் பாலில்லை.இது நம்மை இறவாமல் காக்கும் அமிர்தமாகும். யோகிகள் இதை நாள்தோறும் உண்டிருப்பர். சாதாரணமாக இது தொண்டை வழியாக உள்ளே சென்று அக்னியில் விழுந்து போகும். அவ்வாறு விடாமல் நாக்கை மடித்து வாயால் நன்கு சுவைத்து நெடுநேரம் இருத்தி உண்ணவேண்டும். அப்படி உண்பவர்களுக்கு காயசித்தி ஏற்படும். உடலுக்கு அதிக சக்தி கிடைக்கும். நீண்டநாள் வாழலாம். ப்ராணாயாமத்தால் பிட்யூட்ரி சுரப்பியை நன்றாகச் சுரக்கச் செய்யமுடியும். 



ஊறு மமிர்தத்தை யுண்டி யுறுப்பார்க்கில்
கூறும் பிறப்பறுக்க லாம். - ஔவையார்.



இந்த உமிழ்நீரில் ஸ்டார்ச் இருக்கிறது. தாவரங்கள் இந்த ஸ்டார்ச் மூலமாகத்தான் தேவையான உணவை தயாரித்துக் கொள்கின்றன. அதற்க்குச் சூரிய ஒளியும் நீரும் இருந்தால் போதும். சித்தர்களும் இந்த வழிமுறையையே பின்பற்றி இருக்கிறார்கள். உமிழ்நீரில் இருந்து ஸ்டார்ச்சை பெற்ற உடல் அதன் உதவியோடு சூரிய ஒளியில் இருந்து உடலுக்குத் தேவையான சக்தியை தயாரித்துக் கொள்ளும். ப்ராணாயாமம் செய்தால் காயப்பால் அதிகம் சுரக்கும்.
எப்பொழுதும் துப்பிக் கொண்டே இருப்பவர்களுக்கு எப்பொழுதாவது சுரக்கும் இந்த உமிழ்நீரின் சக்தி கிடைக்காமலே போய்விடுகிறது. சித்தர்கள் உணவை நன்றாக மென்று அரைத்து நீர்போலாக்கி சாப்பிடச் சொன்னார்கள். அப்படிச் சாப்பிடும்போது உமிழ்நீர் சுரந்து உணவுடன் கலந்து நமக்கு பலம் கிடைக்கும். நீரை மெதுவாகச் சாப்பிடுவது போலக் குடிக்கச் சொன்னார்கள். அப்படிக் குடிக்கும் போது உமிழ்நீர் நீருடன் கலந்து நமக்கு நல்ல பலன் தரும்.
எனவே உணவைக் குடியுங்கள்.
நீரைச் சாப்பிடுங்கள்.
பான்பராக், புகையிலைப் பொருள்களைப் போட்டு துப்புவதை நிறுத்துங்கள்.

Sunday, November 11, 2012

பழமொழிகள்


பழமொழிகள் ()

சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி
சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.
சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.
சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா
சர்க்கரை என்றால் தித்திக்குமா?

பழமொழிகள் (கோ)

கோட் சொல்பவைக் கொடுந்தேள் என நினை.
கோட் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.
கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.
கோபம் சண்டாளம்.
கோயிற் பூனை தேவர்க்கு அஞ்சுமா?
கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?
கோளுஞ் சொல்லி கும்பிடுவானேன்?

''
கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கு கோடாமை கோடி பெறும் ''
[*
கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்*]

''
கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும் ''
[*
மற்றவர்கள் கோடி கொடுத்தாலும் நல்ல குடியில் பிறந்தாரோடு கூடிப் 
பழகுவதே கோடிப் பெருமை*] இது ஒளவையாரின் பொன்மொழி

பழமொழிகள் (கை)

கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா
கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்
கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்
கையிலே காசு வாயிலே தோசை
கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலம்


கொடிக்கு காய் கனமா?
கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.
கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
கொடுத்தைக் கேட்டால் அடுத்த தாம் பகை.
கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?
கொண்டானும் கொடுத்தானும் ஒன்று,கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
கொல்லன் தெருவில் ஊசி விலைபோமா?
கொல்லைக் காட்டு நரி சலசலப்புக் அஞ்சுமா?
கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாது.
கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.


கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
கேட்ட தெல்லாம் நம்பாதே? நம்பிந்தெல்லாம் சொல்லாதே?
கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்


கெடுக்கினும் கல்வி கேடுபடாது
கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது
கெடுவான் கேடு நினைப்பான்
கெட்டாலும் செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
கெட்டும் பட்டணம் சேர்
கெண்டையைப் போட்டு வராலை இழு.
கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.


கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.


குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
குடி வைத்த வீட்டிலே கொள்ளி வைக்கலாமா?

குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்.
குணத்தை மாற்றக் குருவில்லை.
குணம் இல்லா வித்தை எல்லாம் அவித்தை.
குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.

குதிரை இருப்பு அறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
குதிரை ஏறாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது.
குதிரை குணமறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும்.
குப்பை உயரும் கோபுரம் தாழும்.

குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.
குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
குலம் குப்பையிலே, பணம் பந்தியிலே
குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.

குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.

குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கு.
குரங்கின் கைப் பூமாலை.
குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
குரு இலார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.


கிட்டாதாயின் வெட்டென மற
கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?

கீர்த்தியால் பசி தீருமா?
கீறி ஆற்றினால் புண் ஆறும்.


காசுக்கு ஒரு குதிரையும் வேண்டும் காற்றைப் போலப் பறக்கவும் வேண்டும்.
காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.
காட்டுக்கு எறித்த நிலாவும் கானலுக்குப் பெய்த மழையும்.
காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா?

காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா?
காணி ஆசை கோடி கேடு.
காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம்
காற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே.
காப்பு சொல்லும் கை மெலிவை.

காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.
காய்த்த மரம் கல் அடிபடும்.
காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது.
காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.
காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?

கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை
காலம் செய்கிறது ஞாலம் செய்யாது.
காலம் போம் வார்த்தை நிற்கும், கப்பல் போம் துறை நிற்கும்
காலுக்குதக்க செருப்பும்,கூலிக்குத் தக்க உழைப்பும்.

காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமாநுண்சீலை. 
காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
காற்றில்லாமல் தூசி பறக்குமா?
காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.


கங்கையில் மூழ்கினாலும் காக்க்கை அன்னம் ஆகுமா?
கசடறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை.
கடலுக்குக் கரை போடுவார் உண்டா?
கடலைத் தாண்ட ஆசையுண்டு கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.
கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது?
கடல் திடலாகும், திடல் கடலாகும்.

கடல் மீனுக்கு நீச்சுப் பழக்க வேண்டுமா?
கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.
கடன் இல்லா கஞ்சி கால் வயிறு.
கடன் வாங்கிக் கான் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கைவிட்டனும் கெட்டான்.

கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
கடித்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.
கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
கடுகு போன இடம் ஆராய்வார், பூசுணைக்காய் போன இடம் தெரியாது.

கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
கடுஞ் சொல் தயவைக் கெடுக்கும்.
கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறது.
கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் பொன்னம்மாள்.
கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாள் நிற்கும்.

கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.
கட்டின வீட்டுக்கு எட்டு வக்கனை.
கணக்கன் கணக்கறிவான் தன் கண்க்கைத் தான் அறியான்.
கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.

கண் கண்டது கை செய்யும்.
கண் குருடு ஆனாலும் நித்திரையில் குறையுமா?
கண்டதே காட்சி கொண்டதே கோலம்.
கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.

கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.
கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.

கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி
கப்பற்காரன் வாழ்வு காற்று அடித்தால் போச்சு.
கரணம் தப்பினால் மரணம்.
கரிவிற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?
கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தைப் பாரான்.

கரும்பு கசக்கிறது வாய்க் குற்றம்
கரும்பு விரும்ப அது வேம்பாயிற்று.
கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாம்?
கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்
கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.

கல்லாடம் [ நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.
கல்லாதவரே கண்ணில்லாதவர்.
கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
கல்வி அழகே அழகு.
கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.

கல்விக்கு இருவர், களவுக் கொருவர்.
கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது.
களை பிடுங்காப் பயிர் காற்பயிர்.
கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
கள்ள மனம் துள்ளும்.

கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம்.
கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ!
கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான்.
கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது.

கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.
கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?
கனிந்த பழம் தானே விழும்.
கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.
கற்பில்லாத அழகு, வாசனை இல்லாத பூ.


ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.

ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.


ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!


ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா?


ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை
ஏரி நிறைந்தால் கரை கசியும்.
எருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை
ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஓக்கும்.
ஏழை என்றால் எவர்க்கும் எளிது
ஏழைபேச்சு அம்பலம் ஏறாது
ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குச்
கோபம்.


எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் 
என்ன தருவாய் ?

எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
[
நெருப்பில்லாது புகையாது]

எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்த்தென்ன?

எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்.
எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
எண்ணை முந்துதோ திரி முந்துதோ?

எதார்த்தவாதி வெகுசன விரோதி.
எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.

எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா
எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே. 

எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
எலி அழுதால் பூனை விடுமா?
எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.

எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?
எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்

எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
எள்ளூ என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
எறும்பு ஊர கல்லுந் தேயும்.
எறும்புந் தன் கையால் எண் சாண்


ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.
ஊண் அற்றபோது உடலற்றது.
ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு
ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.


உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா
உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.

உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.

''
உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார்
தம் மனையில் உண்ணாமை கோடி பெறும் ''
[
வருந்தி உபசரிக்காதவர்கள் வீட்டில் உண்ணாதது கோடிப் பெருமை ]
இது பழமொழியன்று.... பொன் மொழி. ஒளவையார் பாடியது.

உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
உலோபிக்கு இரட்டை செலவு.
உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.

உளவு இல்லாமல் களவு இல்லை.
உள்ளது சொல்ல ஊரு மல்ல நல்லது சொல்ல நாடுமல்ல
உள்ளது போகாது இல்லது வாராது.
உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய
உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்
உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.
[
இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]


ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
ஈர நாவிற்கு எலும்பில்லை.


இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
இஞ்சி இலாபம் மஞ்சளில்.
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.

இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.

இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை 
இராச திசையில் கெட்டவணுமில்லை 
இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.

இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
இருவர் நட்பு ஒருவர் பொறை.
இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.

இளங்கன்று பயமறியாது
இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
இறங்கு பொழுதில் மருந்து குடி
இறுகினால் களி , இளகினால் கூழ்.

இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
இறைத்த கிண்று ஊறும், இறையாத கேணி நாறும்.
இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே
இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.


ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
ஆரால் கேடு, வாயால் கேடு.
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.

ஆழமறியாமல் காலை இடாதே.
ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.

ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.

ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
ஆனைக்கும் அடிசறுக்கும்.
ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே


அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
அகல உழுகிறதை விட ஆழ உழு.
அகல் வட்டம் பகல் மழை.
அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
அடக்கமே பெண்ணுக்கு அழகு

அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
அடாது செய்தவன் படாது படுவான்.
அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு
இரைச்சல் இலாபம்.
அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது 

அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
அந்தி மழை அழுதாலும் விடாது.
அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்திடியில் பயம்.
அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.


அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
அழுத பிள்ளை பால் குடிக்கும்.
அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
அளக்கிற நாழி அகவிலை அறியுமா?


அறச் செட்டு முழு நட்டம் .
அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
அறமுறுக்கினால் அற்றும் போகும்.


அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
அறிய அறியக் கெடுவார் உண்டா?
அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.


அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி
தான் தியாகம் வாங்கவேண்டும்.
அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
அற்ப அறிவு அல்லற் கிடம்.


அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
அன்று எழுதிவன் அழித்து எழுதுவானா?
அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?