தமிழர்களின் முதல் முத்திரை முதல் முதலாக இலங்கையில் தமிழரசுக் கட்சி தனி நாட்டை பிரதிபளிக்கும் நோக்கோடு 1961ம் ஆண்டு தமிழர்களின் முதல் முத்திரையை வெளியிட்டது.
விவசாயம், கப்பல், போக்குவரத்து மற்றும் தொழில்த்துறைகளின் சிறப்பை எடுத்துக்காட்டும் பொருட்டு அந்த முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டது. தந்தை செல்வநாயகம் அவர்கள் யாழ்ப்பாணத்தில் தமிழரசு அஞ்சல் அதிகாரியாகவும் பணி செய்தார்.
அப்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த தமிழர்கள் தமிழரசு முத்திரைகளை விற்றதோடு வீடு வீடாகவும் சென்று கடிதங்களை விநியோகித்தார்கள்.இவைகள் தமிழரசு மற்றும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் வரலாறு.[ இதைப்பற்றிய மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் தந்து உதவுங்கள்]
ஆனால் இன்று தமிழர்கள் சார்பாக பாராளுமன்றம் செல்பவர்கள் நாற்காலி கிடைத்தவுடன் பேரினவாதத்துடன் ஒட்டிக்கொள்வதும், தமிழர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்துவதும், போர்க்குற்றம், இனப்படுகொலை பற்றி வாய் துறக்கக்கூடாது என வாய்கூசாமல் பிரச்சாரம் செய்கின்றார்கள்.
No comments:
Post a Comment